\
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரில்  கன்னங்குறிச்சி அதிமுக நிர்வாகி கைது!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரில் கன்னங்குறிச்சி அதிமுக நிர்வாகி கைது!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரில் கன்னங்குறிச்சி அதிமுக நிர்வாகி கைது!
Published on

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த கன்னங்குறிச்சி அதிமுக அவைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சி பேரூராட்சியின் அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன், கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மாதேஸ்வரன் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையிலான குழுவினர் மாதேஸ்வரன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மாதேஸ்வரன் வீட்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் பணம் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தாலும், விசாரணையில் அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தும் பறக்கும் படை அலுவலர் புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மாதேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 100 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com