பேருந்து மீது கண்மண் தெரியாமல் வந்து மோதிய லாரி - சிசிடிவி காட்சி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கூட்டுச் சாலையில் பேருந்தில் ஏற முயன்ற பெண் மீது பக்கவாட்டில் வந்த லாரி மோதியதில் உடல் நசுங்கி பெண் பலியானார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நெல்வாய் கூட்டுச் சாலை பகுதி மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. கடந்த 5ம்தேதி வந்தவாசியில் இருந்து சென்னைக்கு வந்த அரசுப் பேருந்து நெல்வாய் கூட்டுச்சாலை அருகே வரும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் எனப் பலரும் முண்டியத்துக் கொண்டு பேருந்தில் ஏற முயன்றனர்.
அப்போது திருமுக்கூடல் பகுதியிலிருந்து வந்த லாரி, எதிர்பாராதவிதமாக பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இருச்சக்கர வாகனம் மற்றும் பள்ளி பேருந்தின் மீது மோதிய பிறகு பேருந்தில் ஏற முயன்ற சோபியா என்ற பெண் மீதும் லாரி மோதியது. இதில் இருச்சக்கர வாகன ஓட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பேருந்தில் ஏற முயன்ற பெண் பலியானதும், இருச்சக்கர வாகன ஓட்டி உயிர் தப்பியதும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.