\
Kanimozhi Slams TVK Govt Over Sathankulam Crime
கனிமொழிPt web

சாத்தான்குளம் சிறுமிகள் கடத்தல்.. பெண்களுக்கு தவெக தரும் பரிசா? - கனிமொழி விமர்சனம்!!

சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து தாயை கொன்று இரு மகள்கள் கடத்தபட்டுள்ளனர்; தமிழ்நாட்டை அசாதாரணச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு - கனிமொழி எம்.பி.
Published on: 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே காதல் விவகாரத்தில் ஞானப்பிரகாஷ் என்ற இளைஞர் ஒருவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவரது தந்தை மற்றும் சகோதர் பிளஸெட் ராஜா ஆகியோரை சரமாரியாக வெட்டியதுடன், அவரது தாயையும் வெட்டிக் கொன்று 15 மற்றும் 13 வயதுள்ள 2 பெண் குழந்தைகளை கடத்திச் சென்று தனது வீட்டில் அடைத்து வைத்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து, தகவலறிந்த போலீசார் இன்று காலை அடைக்கப்பட்டிருந்த சிறுமிகளை மீட்டதுடன்,  ஞானப்பிரகாஷையும் கைது செய்திருக்கின்றனர். எனினும், காயமடைந்த பெண்ணின் தந்தை முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் பிளஸெட் ராஜா ஆகியோர் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விஜய் - கனிமொழி
விஜய் - கனிமொழிPt web

இந்தச்சூழலில் தான், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, திமுக எம்.பி. வெளியிட்டுள்ளப் பதிவில், ”சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.

Kanimozhi Slams TVK Govt Over Sathankulam Crime
ஒரே கொசு… 3 கொடிய காய்ச்சல்கள்! மக்களே மழைக்காலத்தில் உஷார்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலைப்பார்க்க தெரிந்தவரிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்!!

தொடர்ந்து வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ”குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இளைஞர் கல்லால் தாக்கிக் கொலை; தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை; திருவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகே காவலாளிக்கு அரிவாள் வெட்டு என தூத்துக்குடி மாவட்டமே தவெக ஆட்சியில் கொலைக்களமாக மாறிவிட்டது. எவ்வித பொறுப்புணர்வுமின்றி ஆட்சியிலிருக்கும் தவெக அரசு, எத்தனை உயிர்ப்போனாலும் நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில் தானே இதுபோன்ற கொலை குற்றங்கள் தொடர்கின்றன! முதலமைச்சர் விஜய் அவர்கள், மக்கள் மீது கருணைகாட்டி எதேனும் வேலைப்பார்க்க தெரிந்தவரிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Kanimozhi Slams TVK Govt Over Sathankulam Crime
மருதுபாண்டியர்கள் குருபூஜை நிகழ்வு.. முன்னேற்பாடுகள் தீவிரம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com