தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவராக கனிமொழி! மற்ற பொறுப்புகளில் யார் யார்?

தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவராக, கட்சியின் துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
கனிமொழி, நாடாளுமன்றம்
கனிமொழி, நாடாளுமன்றம்புதிய தலைமுறை

திமுகவின் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகளை, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். இதுபற்றி அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து, திமுகவின் நாடாளுமன்றக் குழுத்தலைவராக கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள்
திமுகவின் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள்

திமுகவின் மக்களவைக் குழுத்தலைவராக கட்சியின் பொருளாளரான டி.ஆர்.பாலுவும், மக்களவைக் குழுவின் துணைத்தலைவராக தயாநிதி மாறனும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் மக்களவை கொறடாவாக, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கனிமொழி, நாடாளுமன்றம்
”பிரதமர் மோடி, அரசியல் லாபத்திற்காக வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளார்” - திமுக எம்பி கனிமொழி

திமுகவின் மாநிலங்களவைக் குழுத்தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை குழு துணைத்தலைவராக மு.சண்முகமும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக மாநிலங்களவை கொறடாவாக, கட்சியின் சட்ட தலைமை ஆலோசகர் பி. வில்சனும், இரு அவைகளின் பொருளாளராக கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com