'தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு இருக்கின்றனர்' - கனிமொழி

'தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு இருக்கின்றனர்' - கனிமொழி

'தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு இருக்கின்றனர்' - கனிமொழி
Published on

பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதை பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டார். வெள்ளக்கோட்டை, புளியம்பட்டி, சிவன்கோயில் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் பரப்புரை செய்தார். அப்போது பேசிய கனிமொழி, தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உணர்வோடு இருப்பதாகவும், ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அப்படி இல்லை என்றும் தெரிவித்தார். பாஜகவையும், பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவினரை பற்றியும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி கூறினார்.

இதையும் படிக்க: 'கர்நாடகாவில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது' - கமல்ஹாசன்


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com