\
இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? - கனிமொழி

இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? - கனிமொழி

இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? - கனிமொழி
Published on
'நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே' என்று தெரிவித்துள்ளார் கனிமொழி. 
 
நீட் தேர்வின் அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், 
 
''நீட்டின் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.
 
கடந்த வாரம், தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்
 
இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்?''
 
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்
 
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com