கனிமொழி
கனிமொழிfb

அண்ணா அறிவாலயத்தில் தனி அறை! எம்.பி. கனிமொழிக்கு கூடுதல் முக்கியத்துவம்! பின்னணி என்ன?

திமுகவில் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருக்கும்நிலையில், துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
Published on

அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழிக்கும் தனியறை அளிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அலுலக அறையில் கனிமொழியை முதல்வர் ஸ்டாலின் அமர வைத்துள்ளார். இதன் காரணமாக திமுகவில் கனிமொழிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

வருகின்ற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதன்காரணமாக, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்குவித்துள்ளன. இந்தவகையில், திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த முறை திமுக சறுக்கிய தொகுதிகளை குறி வைத்து முதற்கட்ட சந்திப்புகள் நடந்து வருகின்றன.

இந்தவகையில், திமுகவில் 5 துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ள நிலையில், 5 பேரும் ஒரே அறையில் கட்சி பணிகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட அறையில், துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திமுக எம்.பி. கனிமொழிக்கு தனி அறை கொடுக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த அறையை திறந்து கனிமொழியை அமர வைத்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். கனிமொழியிடம் ஒரு முக்கிய பொறுப்பை ஒப்படைப்பதற்காகத்தான் இந்த அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தலைமை கழகத்தில் புதிதாக ஒரு பதவியை உருவாக்கி, தற்போது துணை பொதுச்செயலாளராக இருக்கும் கனிமொழியிடம் அந்த பதவியை ஒப்படைப்பதற்கு ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

பொதுச் செயலாளர் துரைமுருகனை கட்சிப் பதவியிலிருந்து விலகுமாறு தலைமை வற்புறுத்துவதாக கட்சி வட்டாரத்தில் தகவல் பரவி வரும் நிலையில், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் வசதியுடன் கனிமொழிக்கு மிகப்பெரிய அறை ஒதுக்கப்பட்டு இருப்பது பேசுபொருளாகியுள்ளது.

கனிமொழி
அதிமுக ஆலோசனைக் கூட்டம்.. இபிஎஸ் நிர்வாகிகளுக்கு அறிவுரை

தமிழ்நாட்டு அரசியல் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய அரசியலில் கனிமொழிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் விஷகாரத்தில் மத்திய அரசு அமைத்த குழுவில் கனிமொழி இடம்பெற்றிருந்தார். வெளிநாடுகளுக்கு சென்று பலநாட்டு தலைவர்களிடமும் பேசினார். திரும்பி வந்தபோது அவருக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. கட்சியின் 5 துணைப் பொதுச் செயலாளர்களுள் ஒருவராக இருக்கும் கனிமொழி மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் உள்ளார். தேசிய அரசியலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நிலையில் தற்போது அண்ணா அறிவாலயத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது பேசு பொருளாக மாறியுள்ளது. ஒருவேளை மாநில அரசியலில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் தான் தற்போது கனிமொழி செல்வாக்கு செலுத்தி வருகிறார். தமிழ்நாடு அளவில் அவருக்கு இன்னும் முகம் கொடுக்கப்படவில்லை என்றே பார்க்கப்படுகிறது. ஒருவேளை இனி அதில் மாற்றம் நிகழால் என்ற எண்ணம் இந்த நகர்வு மூலம் கணிக்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருப்பதால் அடுத்தடுத்து நடப்பை வைத்துதான் அதனை முடிவு செய்ய முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com