கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்

கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்

கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்
Published on

காஞ்சிபுரத்தில் மது விலக்கு அமலாக்கப் பிரிவின் பெண் தலைமை காவலர் தற்கொலைக்கு முயன்றார். 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் காவல்நிலையத்தில் பெண் காவலர்களாக பணிபுரிந்து வருவபர் சபீராபானு. நேற்று வழக்கம்போல்
பணிக்கு வந்த சபீராபானு, காவல்நிலையத்தில் விஷத்தன்மை கொண்ட கொசு விரட்டியை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை
மீட்ட சக காவலர்கள் ‌சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதற்கிடையில், தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், குடும்ப சூழ்நிலையும் காரணமாக
இருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவலர் சபீராபானுவின் கணவர் மேல்மருவத்தூர் காவல்நிலையத்தில்
எழுத்தராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com