காஞ்சிபுரம்| ”பிரபந்தம் யார் முதலில் பாடுவது?” பெருமாள் கோவிலில் வடகலை - தென்கலை பிரிவினரிடையே மோதல்
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பதற்கு முன்னால் பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே தகராறு.
மார்கழி மாதம் மற்றும் உற்சவ தினங்களில் பெருமாள் கோவில்களில் பிரபந்தம் பாடப்படுவது வழக்கமான ஒன்று. இதில் பிரபந்தம் என்பது பொதுவான ஒன்று பிரபந்தம் தெரிந்தவர்கள் யார்வேண்டுமென்றாலும் பாடலாம். இதில் பாகுபாடு எதுவும் இல்லை.
இந்நிலையில், இருவருக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனையை பொது பிரச்சனையாக மாற்றுவது என்பது சரியானது அல்ல... இந்நிலையில் காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று பிரபந்தம் பாடுவதில் வடகலை பிரிவினருக்கும் தென்கலை பிரிவினருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.
கோவில் வளாகத்திலேயே இரு பிரிவினருக்கும் இடையில் பிரபந்தம் யார் முதலில் பாடவேண்டும் என்ற வாக்குவாதத்தில், கோவில் நிர்வாகமும், போலிசாரும் தலையிட்டு இவர்களின் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையை அடுத்து பாடல்கள் பிரபந்தம் பாடப்பட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது