பள்ளி மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் அவலம்: நிர்வாகத்திடம் தீவிர விசாரணை

பள்ளி மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் அவலம்: நிர்வாகத்திடம் தீவிர விசாரணை

பள்ளி மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் அவலம்: நிர்வாகத்திடம் தீவிர விசாரணை
Published on

பள்ளி மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் மாணவி ஒருவர் அவர் பயிலும் பள்ளியின் கழிவறையை சீருடையுடன் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைகளில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது சமூக வலைதளங்களில் பரவியது சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பள்ளி கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்த மாணவி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது,

இதையடுத்து அந்த மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னார்களா, அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்பது தெரியவில்லை. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த காட்சி, ஆனம்பாக்கம் கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக பள்ளிக்கல்வித் துறை விசாரணை மேற்கொண்டு இதில் ஏதேனும் உள்நோக்கம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பவதியை தொடர்பு கொண்டு கேட்கும்போது "பள்ளியில் தூய்மை பணிகளை மேற்கொள்ள கிராம தூய்மை பணியாளர்கள் இருக்கிறார்கள். தினதோறும் அவர்கள் மூலம் பள்ளி வளாகம் கழிவறை அனைத்துமே தூய்மைபடுத்தப்படுகிறது. இந்நிலையில் மாணவி எதற்காக கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உள்நோக்கத்தோடு யாரோ ஒருவர் ஒரு விஷயத்தை கையாண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com