இடிந்து விழுந்த சுவர்புதிய தலைமுறை
தமிழ்நாடு
காஞ்சிபுரம்: தொடர் மழைக்கிடையே சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி மரணம்
65 வயதுடைய மூதாட்டி, சின்ன குழந்தை தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்தியாளர்: இஸ்மாயில்
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டி, சின்ன குழந்தை. இவர் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதில் பலத்த காயமுற்ற மூதாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த மூதாட்டியின் உடலை பாலுச்செட்டி காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
மூதாட்டியின் பழமை வாய்ந்த ஓட்டுவீட்டின் சுவர், தொடர் மழையின்போது ஈரப்பதம் காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் பாலுச்செட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.