\
காஞ்சிபுரம்: கிணற்றில் விழுந்த குட்டிகளை மீட்க தாய் நாய் நடத்திய பாசப் போராட்டம்

காஞ்சிபுரம்: கிணற்றில் விழுந்த குட்டிகளை மீட்க தாய் நாய் நடத்திய பாசப் போராட்டம்

காஞ்சிபுரம்: கிணற்றில் விழுந்த குட்டிகளை மீட்க தாய் நாய் நடத்திய பாசப் போராட்டம்
Published on: 

தன் குட்டிகள் கிணற்றில் விழந்ததால் கதறிய தாய் நாயின் பாசப்போராட்டம் - குட்டிகளை மீட்டெடுத்து காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் தாயுடன் சேர்த்தனர்.

காஞ்சிபுரம் தும்பவனம் தெரு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இக்கிணறு அப்பகுதியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக பயனற்ற நிலையில் இருக்கிறது.

இந்நிலையில் அக்கிணற்றில் மூன்று நாய்க்குட்டிகள் தவறி விழுந்துள்ளது. இதனைக் கண்ட தாய் நாய் கதறிய நிலையில் கிணற்றை சுற்றிச் சுற்றி வந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த மூன்று நாய் குட்டிகளையும் உயிருடன் மீட்டு தாய் நாயுடன் சேர்த்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com