காஞ்சிபுரம்: காணாமல் போன கர்ப்பிணி பெண், கழிவு நீர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு

சுங்குவார்சத்திரம் அருகே கர்ப்பிணி பெண்ணை சிலர் கொலை செய்து கழிவுநீர் கால்வாயில் சடலத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து.
Tragedy
Tragedypt desk

செய்தியாளர்: கோகுல்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் (40) - தேவி (34) தம்பதியர். தேவி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், திருமங்கலம் பகுதியில் பாலாஜி என்பவரின் வீட்டில் எம்ராய்டிங் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை வேலைக்குச் சென்ற தேவி வீடு திரும்பவில்லை. தேவியை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.

Murder
Murderpt desk

இதற்கிடையே திருமங்கலம் பள்ளத் தெருவில் உள்ள கழிவு நீர் கால்வாயில் பெண் சடலம் ஒன்று இருப்பதாக போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏ.எஸ்.பி. உதயகுமார் தலைமையிலான போலீசார், ஆடையின்றி இருந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். அப்போது சடலமாக மீட்கப்பட்டது காணாமல் போன தேவி என்பது போலீசாருக்கு உறுதியானது.

Tragedy
சிவகாசி: கோயில் திருவிழாவில் தகராறு - ஜேசிபி உரிமையாளரை கொலை செய்ததாக 6 பேர் கைது

இந்நிலையில், உடலில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதால் தேவி அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து கழிவு நீர் கால்வாய்க்கு அடியில் சடலத்தை வீசிச் சென்றவர்கள் யார், என்பது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com