காஞ்சிபுரம்: உடல் பருமனைக் கிண்டல் செய்த கணவன் - விபரீத முடிவு எடுத்த மனைவி!

ஸ்ரீபெரும்புதூரில், உடல் பருமனைக் கணவன் கிண்டல் செய்ததால் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
file image
file imagePT WEB

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி துர்கா (26). இவர்களுக்கு ஆஷிதா, நித்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு வீட்டில் உணவு அருந்திக் கொண்டிருந்த போது மணிகண்டன், மனைவி துர்காவின் உடல் பருமனைக் கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துர்கா "இது போல் கிண்டல் செய்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன்" என மணிகண்டனிடம் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு கொண்டு தீ வைத்துக் கொள்வதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து துர்காவைச் சமாதானம் செய்த பிறகு மணிகண்டன் அவரது அறைக்கு உறங்கச் சென்றுள்ளார். துர்கா சமையல் அறைக்குச் சென்ற போது, கேஸ் அடுப்பில் இருந்து தீ திடீரென துர்காவின் உடலில் பற்றியுள்ளது. வலி தாங்க முடியாமல் துர்கா கதறியுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மணிகண்டன் தீயை அணைத்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார்.

file image
'படிப்பை விட்றாதீங்கப்பா...' - மேலும் 91 சென்ட் நிலம் வழங்கிய ஆயி பூரணம் அம்மாள்!

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் துர்காவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் துர்கா 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஶ்ரீபெரும்புதூர் போலீசார் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் பருமனைக் கிண்டல் செய்த கணவனால் மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com