\
காதலியின் உயிருக்கு ஆபத்து - காவல்துறையில் புகாரளித்த காதலன்

காதலியின் உயிருக்கு ஆபத்து - காவல்துறையில் புகாரளித்த காதலன்

காதலியின் உயிருக்கு ஆபத்து - காவல்துறையில் புகாரளித்த காதலன்
Published on

காதலியை மீட்டு தரக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் காதலன் புகார் அளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , பெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப் என்கிற ஜோஸ்வா. இவருடைய தங்கை கலாவும் அவரது தோழி சுவேதாவும் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் தேரடி பகுதியில் குருவில்லா என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வந்துள்ளனர்

தங்கையின் கடைக்கு உதவிக்கு சென்று வந்த ஜோஸ்வாவிற்கு சுவேதாவுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி ஒரு வருடமாக பழகியுள்ளனர். இந்நிலையில் ஸ்வேதாவிற்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்வதாக கூறியதால் அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற பிரதாப் சுவேதாவை பெண் கேட்டுள்ளார்.

அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாகனம் ஏற்றி கொல்ல முயற்சித்ததாகக் கூறி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பிரதாப் சார்பில் கடந்த 4ம் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் பிரதாப்பிற்கு திருமணம் செய்து தருவதை விட அவளை கொன்று விடலாம் என தனது உறவினருடன் தொலைபேசியில் பேசியதாக சுவேதா கூறியுள்ளார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக அச்சமடைந்த பிரதாப், தனது காதலியை மீட்டுத் தரக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com