\
வீட்டில் பட்டாசுகள் வெடித்து 3 பேர் படுகாயம்

வீட்டில் பட்டாசுகள் வெடித்து 3 பேர் படுகாயம்

வீட்டில் பட்டாசுகள் வெடித்து 3 பேர் படுகாயம்
Published on

காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து 3 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள பல்லவன் தெருவில் வசித்து வருபவர் மோகன். இவர் தீபாவளி சீட்டு நடத்தி வருவதால், பங்குதாரர்களுக்கு வழங்க சிவகாசியிலிருந்து மொத்தமாக பட்டாசு வாங்கி வந்துள்ளார். இதையடுத்து வாங்கி வந்த அதிகளவு பட்டாசை வீட்டில் பதுக்கி வைத்து, சீட்டு போட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்கும், விற்பனைக்காகவும் பிரித்து வைக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வீடு இடிந்து விழுந்தில் மோகனுடன், கோமளா உள்ளிட்ட 3 பேர் இடுபாடுகளுக்குள் சிக்கிகொண்டனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து இடிபாடுகளை அகற்றி மூவரையும் மீட்டனர். இந்நிலையில் காயமடைந்த 3 பேரில் இருவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com