காஞ்சிபுரம்: ‘முதல்வர் சொன்னதுபோல் பதவி விலகுங்கள்’- தியானத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்

காஞ்சிபுரம்: ‘முதல்வர் சொன்னதுபோல் பதவி விலகுங்கள்’- தியானத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்
காஞ்சிபுரம்: ‘முதல்வர் சொன்னதுபோல் பதவி விலகுங்கள்’- தியானத்தில் ஈடுபட்ட காங்கிரஸார்

காஞ்சிபுரத்தில் திமுக நகர் மன்றத் தலைவர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி, ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரசார் தியானம் மேற்கொண்டனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வெற்றி பெற்றனர். இந்நிலையில், நகர் மன்றத் தலைவர் பதவியை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த திமுக நகர செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி 4 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமையை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்னும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக நகர செயலாளர் சதிஷ் குமாரின் மனைவி சாந்தி ராஜினாமா செய்யவில்லை.

இந்நிலையில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வியுற்ற செல்வமேரி, திமுக தலைமை கூறியதுபோல் கூட்டணி தர்மத்தை பாதுகாக்க சேர்மன் பதவியில் இருந்து உடனடியாக சாந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராஜீவ் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com