”நம்மாட்களிடம் வேலை செய்வதில் ஒழுக்கம் இல்லை”-வடமாநிலத்தவரை சுட்டிகாட்டி காஞ்சிபுரம் கலெக்டர் பேச்சு

நம் ஆட்கள் சலுகைகளுடன் அதிக சம்பளம் கேட்கிறார்கள், ஆனால் வடமாநிலத்தவர்கள் குறைவான சம்பளம் கொடுத்தாலும் போதுமென வேலை செய்கிறார்கள் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்PT

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட திட்டக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் ராமமூர்த்தி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 20% வேலை வாய்ப்பை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

நம்மாட்களிடம் வேலை செய்வதற்கான ஒழுக்கம் இல்லை!

அதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், “நம் ஆட்கள் குறைந்தபட்சம் 25 ஆயிரம் சம்பளம், வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை, என அதிகப்படியான சலுகைகள் கேட்கிறார்கள். இதே வடநாட்டவர்கள் 9000 ரூபாய் சம்பளம் இருந்தால் போதும் என பணிபுரிகிறார்கள் என்று தொழிற்சாலைகள் தரப்பில் கூறுகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

குறிப்பாக இது குறித்து தொழிற்சாலைகளில் தமிழர்களாக இருக்க கூடிய மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, உள்ளுர் இளைஞர்களுக்கு நாங்கள் வேலை கொடுக்க தயாராக தான் இருக்கின்றோம், ரூ.15ஆயிரம் கொடுத்தால் கூட அவர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. நாம் குறிப்பிட்டு சொல்லும் நபர்களை வேலைக்கு சேர்க்க சொன்னால் அவர்கள் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். ஆனால் நம் ஆட்கள் பெரும்பாலானோர் எனக்கு அதிக சம்பளம் வேண்டும், நான் ஒழுங்காக வேலைக்கும் வர மாட்டேன் என கூறுகிறார்கள். நம்மாட்களிடம் வேலைக்கு செல்வதற்கான ஒழுக்கமும் இல்லை” என கருத்து தெரிவித்து மாவட்ட ஆட்சியர் ஆவேசமாக பேசினார்.

மாவட்ட திட்டக் குழு கூட்டம்
மாவட்ட திட்டக் குழு கூட்டம்

வேலை தேடும் நம் உள்ளூர் ஆட்களின் மன நிலைமை இப்படி இருந்தால் அவர்களுக்கு எவ்வாறு வேலை கிடைக்கும் என ஆட்சியரே வருத்தம் தெரிவித்து ஆவேசமாக பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com