காஞ்சிபுரம்: மது போதையில் பட்டாகத்தியுடன் ரகளை - இளைஞரை தட்டித் தூக்கிய போலீசார்

காஞ்சிபுரத்தில் இளைஞர் ஒருவர் மது போதையில் வாகனத்தில் செல்லும் பொது மக்களிடம் பட்டாகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Youth
Youth pt desk

செய்தியாளர்: இஸ்மாயில்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேட்டில் இருந்து வெங்கடாபுரம் செல்லும் சாலையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், மது போதையில் பட்டாகத்தியை கையில் வைத்துக் கொண்டு வாகனத்தில் செல்லும் பொதுமக்களிடம் பட்டாகத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார், இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்து சென்றனர்.

youth
youthpt desk

பின்னர் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடியை பட்டாகத்தியால் சேதம்படுத்தியதோடு அதனை தட்டிக் கேட்க முற்பட்ட வாகன உரிமையாளரையும் தாக்க முற்பட்டுள்ளார். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இளைஞரை மடக்கிப் பிடித்து அழைத்து சென்றனர்.

Youth
கர்நாடகா: மனைவியை கொலை செய்த காவலர் - எஸ்பி அலுவலகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

அப்போது, திரைப்படத்தில் வரும் டயலாக் போல வண்டியின் உரிமையாளரை "சிங்கிள்ஸ்-வா; சண்ட செய்வோம்" எனக் கூறி காவல்துறையினர் முன்பாகவே அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இது போன்ற குற்றச் சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க போலீசார் ரோந்து பணியை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com