\
காஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்

காஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்

காஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்
Published on

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மூச்சுத் திணறல் காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சங்கரமடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

ஜெயேந்திரர் ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார். இந்நிலையில் இன்று உடல்நலக் குறைவால் அவரது உயிர் பிரிந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com