தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்: சங்கரமடம் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்: சங்கரமடம் விளக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்: சங்கரமடம் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது குறித்து காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்த‌ரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநர் உள்ளிட்ட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்த நிலையில், விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். 

இதனால், தேசிய கீதத்துக்கு மரியாதையும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதையும் செய்ததாக விஜயேந்திரர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், “வழக்கமாக கடவுள் வாழ்த்து பாடலின் போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் தியான நிலையில் இருப்பது வழக்கம். அதேபோல், தமிழ்த்தாய் வாழ்த்தின் போது கடவுள் வாழ்த்து முறையை பின்பற்றி தியானத்தில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை” என்று விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் தேசிய கீதத்தின் போது எழுந்து நின்றது குறித்து காஞ்சி மடம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com