காஞ்சிபுரம்: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வார்டு உறுப்பினரான விஜய் மக்கள் இயக்க நகர செயலாளர்
காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம் ஒன்றியம் பாலுசெட்டிசத்திரம் அருகே கருப்படித்தட்டை காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரவு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இங்கு மொத்தம் 260 வாக்கு உள்ள நிலையில், அதில் 217 வாக்கு பதிவானது. பிரபு உடன் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பிரபு 65 வாக்கு பெற்றிருக்கிறார். பிறர், 64 - 63 - 25 என்று வாக்குகளும் பெற்று இருந்தனர்.
இதன்மூலம், ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் உடன் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் மீண்டும் வாக்கை எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்படி மீண்டும் எண்ணப்பட்டதிலும் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.