ஆம்புலன்சில் உயிரிழந்த மாணவி: மருத்துவத்துறை இயக்குநர் விசாரணை

ஆம்புலன்சில் உயிரிழந்த மாணவி: மருத்துவத்துறை இயக்குநர் விசாரணை

ஆம்புலன்சில் உயிரிழந்த மாணவி: மருத்துவத்துறை இயக்குநர் விசாரணை
Published on

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியை மேல்சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் ‌உயிரிழந்ததாக எழுந்த புகாரை அடுத்து மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின்‌ 10ஆம் வகுப்பு படிக்கும் மகள் சரிதா. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். பிற்பகல் மாணவியை மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் தராததால் பெற்றோர்கள் அவதியடைந்தனர்.

 பின்னர் இது தொடர்பாக ஆட்சியரிடம் முறையிட்டு அவரது உத்தரவின்பேரில் 7 மணி நேரத்திற்கு பின்னர் ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது. அதில் மாணவி சென்னை அழைத்துவரப்பட்டபோது, வழியிலேயே உயிரிழந்தார். உரிய நேரத்தில் மருத்துவ நிர்வாகம் ஆம்புலன்ஸ் வழங்காததே உயிரிழப்பிற்கு காரணம் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதுதொடர்பாக மருத்துவ இணை இயக்குநர் சுந்தர்ராஜன் மருத்துவமனையில் ஆய்வு செய்த போது, தீவிர அவசர சிகிச்சை பிரிவில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றதாலேயே சிறுமி வேறொரு வார்டுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும், ஆம்புலன்ஸ்காக மருத்துவமனையிலிருந்து பலமுறை தெரியப்படுத்தியும், முறையான தகவல்‌கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்தநிலையில், மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகரன் தலைமையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com