கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போகும் தங்கம் விலை.. தவிக்கும் காஞ்சிபுரம் பட்டுசேலை உற்பத்தியாளர்கள்!

காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய பட்டு சேலைகளின் உற்பத்தி பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.
பட்டு நூல்
பட்டு நூல்புதியதலைமுறை

காஞ்சிபுரத்தில் கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் உலக புகழ் பெற்றவை. மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய பட்டு சேலைகளின் உற்பத்தி பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஜரிகையில் பயன்படுத்தப்படும் உலோகங்கள்

தங்கம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்கள் இணைத்து தயாரிக்கப்படும் ஜரிகையை பயன்படுத்தி பட்டு சேலைகள் நெய்யப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாகவும், காஞ்சிபுரம் பட்டு சேலைகள் தரமாக உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 300 கோடி ரூபாய்க்கு பட்டு சேலை வியாபாரம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.

புதியதலைமுறை

ஒரிஜினல் காஞ்சி பட்டு சேலை குறைந்தபட்சம் 20,000 ரூபாய்க்கும், அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தமிழ்நாடு ஜரிகை ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஜரிகையில், 0.5 சதவீதம் தங்கமும், 40 சதவீதம் வெள்ளியும், 35.5 சதவீதம் தாமிரமும், 24.0 சதவீதம் பட்டு இழையும் உள்ளது. ஒரு பாக்கெட்டில் 242 கிராம் அளவிற்கு ஜரிகை இருக்கும். அவை ஐந்து கட்டைகளில் சுற்றப்பட்டிருக்கும். இவற்றை ஒரு மார்க் என்பர். ஒரு மார்க் ஜரிகை 20,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு மார்க் ஜரிகையில் தங்கம் 1.2107 கிராம், வெள்ளி 96.8 கிராம், தாமிரம் 85.91 கிராம், சில்க் 58.08 கிராம் இருக்கும். சமீபத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடுவென ஏறியதால் பட்டு சேலை விலையையும் உற்பத்தியாளர்கள் 30 சதவீதம் வரை விலை ஏறியுள்ளது..

தனியார் பட்டு சேலை உற்பத்தியாளர்களும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களும் ஜரிகை விலையேற்றம் காரணமாக பட்டு சேலை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றம் காரணமாக ஜரிகை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தினம் தினம் தங்கம் வெள்ளி விலை உயர்வால் ஜரிகையில் முதலீடு செய்ய முடியாத நிலைமைக்கு வியாபாரிகளும் பட்டு சேலை நெசவாளர்களும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர் விலையேற்றத்தால் விற்பனை பாதிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியாமல் போகும் சூழல் ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே அரசு இதில் தலையிட்டு பட்டு சேலைக்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தப்பட வேண்டும் மேலும் பட்டு சேலைக்கு போடப்பட்டுள்ள GST வரியை திரும்பப் பெற்றால் மட்டுமே மிஞ்சியுள்ள கைத்தறி பட்டு நெசவாளர்களை காக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com