காஞ்சிபுரத்தில் 265 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரத்தில் 265 ஏரிகள் நிரம்பின

காஞ்சிபுரத்தில் 265 ஏரிகள் நிரம்பின
Published on

கனமழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 265 ஏரிகள் நிரம்பியுள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை  தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக பெய்த கனமழையின் காரணமாக  நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 924 ஏரிகளில் 265 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 261 ஏரிகளில் 75 சதவிகிதம் வரை தண்ணீர் உள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்ய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மண் மூட்டைகளும் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் கூறினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com