கனவு மெய்ப்பட வேண்டும் நிகழ்ச்சி: பெற்றோர், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
புதிய தலைமுறை மற்றும் கன்னியாகுமரி நெய்யூர் மவுண்ட் லிட்ரா பள்ளி இணைந்து நடத்திய கனவு மெய்ப்பட வேண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களை பெற்றோர்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்த இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் மவுண்ட் லிட்ரா பள்ளி தலைவர் வெனிஸ்லஸ் மற்றும் பள்ளியின் முதல்வர் லெட்சுமி கலா ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஊக்க பேச்சாளர் சுமதி ஸ்ரீ, மற்றும் ஊட்ட சத்து நிபுணர் விஷ்ணுபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். பெற்றோர் மற்றும் மாணாக்கர்களுக்கு வழிகாட்டுதலை வழங்கினார். நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாக பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என 500 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.