தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம்: கன்னடியன் கால்வாயில் சோதனைஓட்ட நீர் திறப்பு

முதலமைச்சர் ஆணையின்படி கன்னடியன் கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டத்தில் சோதனை ஓட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் முதலமைச்சர் ஆணையின்படி கன்னடியன் கால்வாய் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ள நிலையில், உபரிநீர் திறக்கப்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால் வேளாண் பெருமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com