\
அம்பேத்கர் பிறந்த தினம் - கமல்ஹாசன் ட்வீட்

அம்பேத்கர் பிறந்த தினம் - கமல்ஹாசன் ட்வீட்

அம்பேத்கர் பிறந்த தினம் - கமல்ஹாசன் ட்வீட்
Published on

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய புரட்சியாளர் அம்பேத்கரின், 130வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியா முழுவதிலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கருக்கு, மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் “‘அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும்’ என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com