“கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை” - கமல்ஹாசன்

“கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை” - கமல்ஹாசன்

“கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை” - கமல்ஹாசன்
Published on

பேச்சுவார்த்தைகள் உரிமைக்காக தொடரட்டும் எனவும் கல்விச்சாலைகள் கடமைக்காக திறக்கட்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலி பணியிடங்களாக கருதப்பட்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு பல்வேறு சங்கத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவளித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் என ஜாக்டோ ஜியோ, ஆசிரியர்கள் சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை எனவும் கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மேலும் “அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை. பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்” என தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com