“முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும்” - கமல்ஹாசன்
கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம்சாட்டியவர்கள் பொய்சொல்லி இருந்தால் அது குற்றம்; அவர்கள் நிஜம் பேசியிருந்தால் அதை தடுப்பது அதை விட பெரிய குற்றம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கட்சியின் புதிய அலுவலகம் திறக்கவும், பொங்கலை கிராமப்புற சூழலில் மக்களுடன் மக்களாக கொண்டாடவும் கோவை மாவட்டம் வந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் கோடநாடு விவகாரம் தொடர்பாக கேள்விக்கு முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் வருவது தொடர்பான கேள்விக்கு, நானும் இரண்டரை வருடமாக அதைதான் வலியுறுத்தி வருவதாகவும், எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது வெளியாகியுள்ள ஆவணபடம் ஒரு மர்ம கதையின் அடுத்த அத்தியாயமாக இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் மற்ற முதலவர்கள் மீது இது போன்ற கொலை குற்றசாட்டு இல்லை என சொல்ல முடியாது. ஆனால் இங்கிருப்பது நமக்கு பெருமையான விஷயமல்ல எனத் தெரிவித்தார். பின் அவர்களுக்கு உடனே தண்டணை வழங்க வேண்டும் என சொல்லவில்லை. அவர்கள் மீது உள்ள சந்தேகத்திற்கு ஆதாரமாக இருப்பதில் ஒன்றாக இருக்க கூடும் என நினைப்பதில் தவறில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.