\
வட சென்னைக்கு ஆபத்து: கமல் ட்வீட்

வட சென்னைக்கு ஆபத்து: கமல் ட்வீட்

வட சென்னைக்கு ஆபத்து: கமல் ட்வீட்
Published on

எண்ணூர் கழிமுகத்தை உதாசினப்படுத்தினால் வட சென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் சென்னை அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் ஏராளமான கழிவுகள் கொட்டப்படுகின்றன என்று நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அப்பகுதி மக்களும் பல ஆண்டுகளாக போராடியும் அரசு பாராமுகமாய் உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களும் தங்களின் முனையங்களை நடு ஆற்றில் கட்டியுள்ளன என்று கூறியுள்ள அவர், நில வியாபாரிகளுக்கு கொடுக்கும் முன்னுரிமையை ஏழை மக்களுக்கு கொடுக்காத அரசு நல் ஆற்றைப் புறக்கணிப்பதாகவும் கடுமையாக சாடியுள்ளார். ஆபத்து வந்த பின் கூப்பிட்டு கதறாமல், முன்பே அரசையும் மக்களையும் எச்சரிக்கிறோம் என்றும், மக்கள் செவிசாய்ப்பார்கள் என்றும் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com