தமிழ்நாடு
உள்ளாட்சி தேர்தலில் மநீம தனித்துப் போட்டி - கமல்ஹாசன்
உள்ளாட்சி தேர்தலில் மநீம தனித்துப் போட்டி - கமல்ஹாசன்
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாமக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருக்கிறது. இந்நிலையில் மநீம கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், '’உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே’’ என்று பதிவிட்டுள்ளார்.

