'பாரதியின் அக்கினிக் குஞ்சுகளாய் மாறி புதிய அரசியல் சமைப்போம்' என்று பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சாவிலாக்கவி.
நம் தமிழுடனும், வாழ்வுடனும் நீக்கமறக்கலந்து விட்ட முண்டாசுக்காரரின் பெருங்கனவை நனவாக்குவோம். அரசியலில் இளையோரானாலும், தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் இல்லை என்ற திரு.சுப்ரமணியபாரதியின் அக்கினிக்குஞ்சுகளாய் மாறி புதியஅரசியல் சமைப்போம். வான்புகழ் தமிழகம் காண்போம்.''