\
தனி மனித உரிமைகளின் கேடயம் - அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு கமல்ஹாசனின் பதிவு

தனி மனித உரிமைகளின் கேடயம் - அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு கமல்ஹாசனின் பதிவு

தனி மனித உரிமைகளின் கேடயம் - அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு கமல்ஹாசனின் பதிவு
Published on

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அவரின் நினைவுகளை பகிர்ந்து பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ''இந்தியத் திருநாடு, யாரையும் மதத்தாலோ,இனத்தாலோ, மொழியாலோ,தொழிலாலோ, பாகுபாடு பாராது, அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்ற இவரது கனவு தான் அரசியல் சட்டமாகி, தனி மனித உரிமைகளின் கேடயம் என நிற்கிறது. அண்ணல் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை, உயர்வு, தாழ்வு பேசுவோரை ஓடச் செய்வதே'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com