“ரத்த வெறிக் கொண்டு ஆடுது பூமி” - பொன்பரப்பி கலவரம் பற்றி கமல் பாடல்

“ரத்த வெறிக் கொண்டு ஆடுது பூமி” - பொன்பரப்பி கலவரம் பற்றி கமல் பாடல்
“ரத்த வெறிக் கொண்டு ஆடுது பூமி” - பொன்பரப்பி கலவரம் பற்றி கமல் பாடல்

‘மருதநாயகம்’படத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாதியக் கலவரங்கள் பற்றிய காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் பொன்பரப்பி வன்முறையுடன் ஒத்துப்போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘மருதநாயகம்’படத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாதியக் கலவரங்கள் பற்றிய காட்சிக்காக எழுதப்பட்ட பாடல் பொன்பரப்பி வன்முறையுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளார்.  

தானும் இளைராஜாவும் இணைந்து எழுதிய பாடல் வரிகளை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். "மதங்கொண்டு வந்தது சாதி - இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி. சித்தம் கலங்குது சாமி - இங்கு ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி" என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டு 300 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையே தற்போதும் நீடிப்பது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 18ம் தேதி சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார்.

இதனால் மற்றொரு தரப்பினர் பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்து 20க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர் தாக்குதல் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com