கமல்ஹாசன் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், வைரமுத்து, பாரதிராஜா வாழ்த்து

கமல்ஹாசன் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், வைரமுத்து, பாரதிராஜா வாழ்த்து
கமல்ஹாசன் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், வைரமுத்து, பாரதிராஜா வாழ்த்து

கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டில் “முத்தமிழறிஞர் கலைஞரால் 'கலைஞானி' என்று போற்றப்பட்ட - எனது நெஞ்சம் நிறைந்த அன்புக்கு உரிய நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலமுடன் நீண்ட காலம் வாழ்க” என தெரிவித்துள்ளார்

வைரமுத்து வெளியிட்டுள்ள டிவீட்டில் “பிறந்தநாள் என்பது சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல; சில தீபங்களை ஏற்றுவது. இருளைப் புறங்காண தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர் நண்பர் கமல்ஹாசன். தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். பலருக்கும் அவர் நம்மவர்; எனக்கு நல்லவர். வாழ்க!” என தெரிவித்துள்ளார்

பாரதிராஜா வெளியிட்டுள்ள டிவீட்டில்” என் முதல் படைப்பின் நாயகன், இலக்கியவாதி, பெரும் சிந்தனையாளன், உலக நாயகன்.. என் கமலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com