தமிழ்நாடு
'வாரியம் அமைய முழங்குவோம்’ - கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
'வாரியம் அமைய முழங்குவோம்’ - கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ் புத்தாண்டையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் தமிழ் புத்தாண்டு என்பதால் பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அதில் ‘ உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். அண்ணல் அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில், அவர் இயற்றிய அரசியல் சாசனத்தின் வழி நடப்போம் என உறுதி ஏற்போம். மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கை நிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.