தமிழ்நாடு
அரசியலிலும் கமலின் சாதனைகள் தொடரட்டும்: கார்த்தி வாழ்த்து
அரசியலிலும் கமலின் சாதனைகள் தொடரட்டும்: கார்த்தி வாழ்த்து
கமலின் சாதனைகள் அரசியலிலும் தொடரட்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை அப்துல் கலாம் வீட்டிலிருந்து தொடங்கியுள்ளார். ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமல்ஹாசன், கலாமின் சகோதரர் முத்து மீரான் மரக்காயரை சந்தித்து ஆசி பெற்றார். மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியி்ன் கொடியை அறிமுகப்படுத்துவதோடு, கொள்கைகளையும் அவர் விளக்க உள்ளார்.
இந்நிலையில் கமலின் அரசியல் வருகைக்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்த்தி, “முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவை முன்னெடுத்துச் சென்று பல சாதனைகள் படைத்தவர் நீங்கள். அந்தச் சாதனை அரசியலிலும் தொடரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

