\
சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி

சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி

சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் பதிலடி
Published on

போராட்டக்காரர்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என்ற கருத்தினை விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமிக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல், நான் தமிழன். முதலமைச்சர் மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். அரசியல்வாதிகள் அனைவரும் மக்கள் முன்னிலையில் தாழ்மையாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், போராட்டக்காரர்கள் மீது சமூகவிரோதிகள் என்ற முத்திரையைக் குத்த வேண்டாம் என்றும், அவர்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கமலின் இந்த கருத்து முட்டாள்தனமானது என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com