சென்னை பல்கலை. போராட்டம் : மாணவர்களுக்கு கமல் நேரில் ஆதரவு 

சென்னை பல்கலை. போராட்டம் : மாணவர்களுக்கு கமல் நேரில் ஆதரவு 

சென்னை பல்கலை. போராட்டம் : மாணவர்களுக்கு கமல் நேரில் ஆதரவு 
Published on

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடத்தும் மாணவர்களை மக்கள் நீதி மய்யத்தின் கமல் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கல்லூரி மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கினர். இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று காலை முதல் சென்னை பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று இரண்டாம் நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில், சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டம் நடத்தும் மாணவர்களை மக்கள் நீதி மய்யத்தின் கமல் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com