\
கமல் சேரியில் வாழ்ந்து பார்த்தால் அவர்களின் நற்குணங்கள் தெரியும்: திருமாவளவன்

கமல் சேரியில் வாழ்ந்து பார்த்தால் அவர்களின் நற்குணங்கள் தெரியும்: திருமாவளவன்

கமல் சேரியில் வாழ்ந்து பார்த்தால் அவர்களின் நற்குணங்கள் தெரியும்: திருமாவளவன்
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன் உட்பட அனைவரும் சேரிப்பகுதியில் வாழ்ந்து பார்த்தால் அங்குள்ள மக்களின் நல்ல குணங்கள் புரியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட சேரி என்ற வார்த்தை கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து விளக்கமளித்த கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கலந்துரையாடலில் தவறில்லை என்றார்.

இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் உள்ள கமலஹாசன் உள்பட அனைவரும் ஒரு வாரம் சேரிப்பகுதியில் வாழ்ந்து பார்த்தால் அம்மக்களின் நல்ல குணங்கள் புரியும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com