கமல் வாங்கிய ஊதியம், கட்டிய வருமான வரி குறித்து அறிக்கை வெளியிட தயாரா? - கடம்பூர் ராஜூ

கமல் வாங்கிய ஊதியம், கட்டிய வருமான வரி குறித்து அறிக்கை வெளியிட தயாரா? - கடம்பூர் ராஜூ
கமல் வாங்கிய ஊதியம், கட்டிய வருமான வரி குறித்து அறிக்கை வெளியிட தயாரா? - கடம்பூர் ராஜூ

திரைப்படங்களில் நடிக்க கமல் எவ்வளவு ஊதியம் வாங்கினார், ‌ எவ்வளவு வருமான வரி கட்டினார் என்பது தொடர்பான வெள்ளை அறிக்கை விட தயாரா என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பகுதிகளில் உள்ள அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் 100 சதவீத பார்வையாளர்களை திரையரங்கினுள் அனுமதிப்பது குறித்து கூறும் போது,“ திரையரங்குகளில் 100 சதவீதம் மக்களை அனுமதிக்க திரையரங்கு உரிமையாளர்கள் இதுவரை அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்ட போதிலும், அதற்கு கூட மக்கள் கூட்டம் வரவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறினர். 50 சதவீத இருக்கைகளை தாண்டி மக்கள் கூட்டம் வரும் போது, திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தால் அதனை அரசு பரிசீலிக்கும். திரையரங்குகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரியை 8 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. 8 சதவீத கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். நிதி நெருக்கடி இருப்பதால் கலந்து ஆலோசித்து விட்டு கூறுவதாக முதல்வர் கூறினார்.

கமல் அரசியல் குறித்து பேசிய அவர், “நடிகர் கமல்ஹாசன் எத்தனை படத்தில் நடித்து உள்ளார்.ஒளிவு மறைவு இல்லாமல் எவ்வளவு ஊதியம் வாங்கினார். எவ்வளவு வருமான வரி கட்டினார் என்று வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா ?.அதன் பின்னர் மற்றவர்களை பற்றி அவர் பேசட்டும்.

முதல்வராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் நாங்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்தான். எம்ஜிஆருக்கு பாத்திய பட்டவர்கள். எனவே நாங்கள் தான் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட முடியும். வேறு யாருக்கும் அவரை சொந்தம் கொண்டாட தார்மீக உரிமை கிடையாது. தார்மிக உரிமை இல்லாமல் சொந்தம் கொண்டாடினால் அதற்கு பெயர் வேறு. அதனை நான் சொன்னால் நாகரிகமாக இருக்காது” என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய அமைச்சர், மக்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அரசு உத்தரவிட்டது‌ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com