\
“சத்தியமே வெல்லும் என நிரூபித்த தீர்ப்பு இது” - கமல்ஹாசன்

“சத்தியமே வெல்லும் என நிரூபித்த தீர்ப்பு இது” - கமல்ஹாசன்

“சத்தியமே வெல்லும் என நிரூபித்த தீர்ப்பு இது” - கமல்ஹாசன்
Published on: 

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட தீர்ப்பு தொடர்பாக ட்விட்டரில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், “நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது எனத் தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்பதால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com