\
தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா..? - கமல்ஹாசன்

தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா..? - கமல்ஹாசன்

தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா..? - கமல்ஹாசன்
Published on

தமிழகத்தில் அலட்சியக்கொலைகள் இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ உலகில் மிக கொடுமையான விஷயம் என்னவென்றால், வாழ வேண்டிய பிள்ளைகளின் மரணச் செய்தியை பெற்றோர்களிடம் சொல்வதுதான். சுபஸ்ரீ மரணமும் கூட அப்படியான ஒன்றுதான். அரசாங்கத்தின் அலட்சியத்தால் பல ரகுக்கள், சுபஸ்ரீக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எங்கே பேனர் வைக்க வேண்டும்..? எங்கே வைக்க கூடாது என்று கூடவா தெரியாது. இவர்களை போன்றவர்களால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றதோ..? எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா..? தப்பை தட்டிக் கேட்டால் நாக்கை அறுப்பேன் என்பதா..? வாருங்கள் தவறை தட்டிக் கேட்போம். புதிய தலைமையை உருவாக்குவோம்” எனக் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com