“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா?”-கமல்ஹாசன்

“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா?”-கமல்ஹாசன்

“ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதா?”-கமல்ஹாசன்
Published on

ஊடகங்களின் சுதந்திரத்தில் கை வைப்பது என்பது ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதற்கு ஒப்பு என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‘நக்கீரன்’ இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை கை செய்யப்பட்டார். ‘நக்கீரன்’ கோபாலின் கைதுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஊடகங்களின் சுதந்திரத்தில் கை வைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையில் கால் வைப்பதற்கு ஒப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர் காலத்து வாய்ப்பூட்டுச் சட்டத்தை தற்போது இந்த அரசு வேறு வடிவத்தில் செயல்படுத்துவதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் மிக முக்கியமாக ஊடக சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com