\
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு

அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு

அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
Published on

காலில் சிறு அறுவைசிகிச்சை செய்யவேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வுத் தேவைப்படுகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அந்த அறுவைசிகிச்சையின் தொடர்ச்சியாக இன்னொரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் பரப்புரை தொடங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது எனவும், அதற்கு மக்களின் அன்பே மருந்தாக இருந்தது எனவும் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com