கமல்ஹாசன் - வாஜ்பாய்
கமல்ஹாசன் - வாஜ்பாய்ndtv

2026 தமிழக சட்டமன்ற தேர்தல்| ’அரசு வீழும்..’ வாஜ்பாயின் வார்த்தைகளை வெளிப்படுத்திய கமல்!

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன் அடல் பிஹாரி வாஜ்பாயின் வார்த்தைகளை வெளிப்படுத்தினார்.
Published on
Summary

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கமல்ஹாசன் NDTV நேர்காணலில், வாஜ்பாயின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் பரபரப்பாக சுழன்றுகொண்டிருக்கிறது. அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகளின் கருத்துகள் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்தரப்பிலிருந்து பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

vijay seeman rejects on eps calls for alliance
சீமான், இபிஎஸ், விஜய்எக்ஸ் தளம்

அந்தவகையில் ஒருபக்கம் அதிமுக-தவெக தரப்பும், மறுபக்கம் திமுக-காங்கிரஸ் தரப்பும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது விசிக தலைவர் திருமாவளவன் மன்னர்கள் கலாசாராம் குறித்து சொன்ன கருத்து, தவெக தலைவர் விஜய் சொன்ன கருணாநிதி, ஜெயலலிதா ரோல்மாடல் கருத்து என அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

aidmk chief eps ambulance controversy speech and threat
kamal haasanPT

இந்தசூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் - வாஜ்பாய்
’அவ்ளோ தொகுதிகள் தரமுடியாது..’ கதவடைத்த அதிமுக, திமுக.. கடும் நெருக்கடியில் தேமுதிக!

வாஜ்பாயின் வார்த்தைகளை வெளிப்படுத்திய கமல்!

NDTV உடனான சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் கமல், தான் பேசுவது புரியவில்லை என கூறுகிறார்கள் என்பதற்கும், 2026 தமிழக சட்டமன்றதேர்தல் குறித்தும் பேசியுள்ளார்.

கமல் சார் கிட்ட கேள்வி கேட்டா, அவர் நல்லா பதில் சொல்வார், ஆனால் எங்களுக்கு தான் புரியாது என்று சொல்றாங்க? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “சில சமயம் என்ன கெட்ட வார்த்தைல திட்டுவாங்க, அப்போ என்னங்க சொல்றீங்க, எனக்கு புரியலங்கனு சொல்றது தான் சரியான பதிலா இருக்கும், ஏன்னா நீங்க இப்படி தான் சொல்றீங்களானு நாம கேட்டு, அவர் ஆமான்னு சொல்லிட்டாருனா என்ன பன்றது. அதாவது புரிஞ்சாலும் புரியாத மாதிரி விட்டுடுவாங்க, ஒருவேளை புரிஞ்சிடுச்சுனா அவங்க பதில் சொல்ல வேண்டியிருக்குமே, அதனால புரியாத மாதிரி சொல்றாங்க. ஆனா நான் உங்களுக்கு புரியவரைக்கும் சொல்லிகிட்டே இருப்பேன்” என்று கலகலப்பாக பதில் சொன்னார்.

கமல்ஹாசன் - வாஜ்பாய்
’அதிமுகவில் இடமில்லை என்பது பழைய செய்தி..’ எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு OPS பதில்!

மேலும் அரசியல் தலைவர்கள் கூட பேசும்போது இப்படி தான் பேசுவிங்களா, இப்போ நீங்க கட்சி வச்சிருக்கீங்க, முக ஸ்டாலின் கிட்ட கூட்டணி பேசப்போறீங்க அப்போ எப்படி பேசுவீங்க? என்ற கேள்விக்கு, நான் எப்படி பேசுவன்னு நீங்க அவங்க கிட்ட தான் கேட்கனும். அந்த உண்மையை அவங்க தான் சொல்லனும் என்று பதிலளித்தார்.

அதற்கு அங்கயும் உங்க உரையாடல் இப்படி தான் இருக்குமா..? “அது ஆஃப் கேமரால பேசுற விசயம், உங்க கேமரா முன்னால எப்படி சொல்ல முடியும்” என்றார். அப்போ கமல்ஹாசன் ஆன் கேமரா, ஆஃப் கேமரா இரண்டிலும் வேறுவேறா பேசுவாரா?, “ஆமாம், நான் ஒரு நடிகன்” என்றார். இதை அரசியல் சார்ந்த பதிலாக எடுத்துக்கொள்ளலாமா என்ற கேள்விக்கு, ’கண்டிப்பாக இது ஒரு அரசியல் சார்ந்த பதில் தான்’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

kamalhaasan
kamalhaasanndtv

இறுதியில் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து விவரிக்க முடியும் என்றால் எப்படி விவரிப்பீர்கள்? என்ற கேள்விக்கு, நான் அடல் பிஹாரி வாஜ்பாயின் வார்த்தைகளை கூற விரும்புகிறேன் என கூறி, “அரசுகள் வீழும், எழும். நாடு நகர்ந்துகொண்டே இருக்கும் நாளையை நோக்கி, அந்த நாளை நமதாக வேண்டும்’ என வாஜ்பாயின் வார்த்தைகளை வெளிப்படுத்தினார். ஆங்கிலத்திலும், தமிழியிலும் சொல்லிவிட்டீர்கள் இந்தியிலும் இதை சொல்வீர்களா? என கேட்க, அதை நான் டெல்லியில் சொல்லிக்கொள்கிறேன் என்று பதிலளித்தார்.

கமல்ஹாசன் - வாஜ்பாய்
ராஜ ராஜன், ராஜேந்திரன் | ’சோழ, பாண்டிய மன்னர்களை அவமதித்த திருமாவளவன்..’ அண்ணாமலை, டிடிவி கண்டனம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com