“வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது”- கமல்ஹாசன்

“வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது”- கமல்ஹாசன்

“வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது”- கமல்ஹாசன்
Published on

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் “ சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது தெம்பாக இருந்தது.  அரசியல் பற்றி ரஜினியும் நானும் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அவரது நிலைப்பாடு எனக்குத் தெரியும். தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக நாங்கள் உருவெடுத்திருக்கிறோம். கூட்டணி குறித்து பேட வேண்டிய காலம் இது இல்லை.

நல்லவர்கள் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் வரும் பட்சத்தில் அவர்களுடன் நிச்சயமாக நாங்கள் கூட்டணி வைப்போம். அப்போது மக்கள் நீதி மய்யம் மூன்றாவது அணியாக இருக்காது. முதல் அணியாக இருக்கும்.

மக்கள் நீதி மய்ய அரசியல் வியூகம் நேர்மைதான். 1,00,000 நபர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள். எங்கள் அரசியல் பழிகூடும் அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல.

ரஜினிக்கு அரசியலை விட உடல்நலமே முக்கியம். அரசியல் நிலைப்பாடு குறித்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவர் மீதான எனது அன்பை இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை.

மன்ஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம், அது குறித்த விமர்சனம் தேவையில்லாதது. நான் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்பது வேட்புமனு தாக்கலின்போதுதான் தெரியும்.

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது. வேலை வாங்கி கொடுப்பதே எனது வேலை. தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே மக்கள் நீதி மய்யத்தின் நோக்கம்.

சட்டப்பேரவையில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் ஒலிக்கும். நான் எப்போதுமே "B" டீமாக இருந்ததில்லை. நான் எப்போதுமே A டீம்தான்.” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com