தமிழ்நாடு
“எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம்” - கமல்ஹாசன் ட்வீட்
“எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம்” - கமல்ஹாசன் ட்வீட்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாள் தொடர்பாக மநீம கட்சி நிறுவனர் நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே மே 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் பல கட்டமாக விசாரணை நடத்தியது. போராட்டக்காரர்கள், உயிரிழந்தவரின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது. 11 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 10 பேர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 3 நாட்களில் 21 பேர் ஆணையத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவு நாளையொட்டி பலரும் பல கருத்துகளை முன்வைத்து வருகிறனர். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் நடிகர் கமல்ஹாசன், அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்களின் குரலுக்குச் செவி சாய்க்காமல், போர்க் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தைக் காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது” எனக் கூறியுள்ளார்.