மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு

மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு

மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு
Published on

மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். அவருடன் மநீம கட்சிகளின் நிர்வாகிகளில் ஒருவரான பொன்ராஜும் பங்கேற்றுள்ளார். அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்றுள்ளார். மேலும் அவருடன் தனபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் அதிமுக சார்பிலும், பாஜக சார்பில் மூத்த தலைவர் இல.கணேசனும் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம், முத்தரசன், காதர் மொய்தீன், வேல்முருகன், ஈஸ்வரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com